Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கச் சுரங்கத்தில் விபத்து: 5 தொழிலாளர்கள் பலி

தங்கச் சுரங்கத்தில் விபத்து: 5 தொழிலாளர்கள் பலி
தங்கச் சுரங்கத்தில் விபத்து - 5 தொழிலாளர்கள் பலி/ Source: Reuters

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள தகார் மாகாணத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

காபூல்

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள தகார் மாகாணத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


தகார் மாகாணத்தின் சா ஆப் மாவட்டத்தில் உள்ள ஷா மஸ்தான் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததாக தகார் மாகாண காவல் துறை செய்தித் தொடர்பாளர் காரி நகீபுல்லா மஸ்ரூர் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து அவர் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இதே மாவட்டத்தின் சம்தி பகுதியில் உள்ள மற்றொரு தங்கச் சுரங்கத்தில் கடந்த வாரம் 10 தொழிலாளர்கள் சிக்கினர். 2 நாள்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டதாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கியதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இரும்புத் தாது, செம்பு, ஈயம், துத்தநாகம், தங்கம், நிலக்கரி மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட ஏராளமான கனிம வளங்களை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதால் சுரங்கங்கள் இடிந்து விபத்துகள் ஏற்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

முந்தைய செய்தி
மின் கட்டணம், மளிகைக்கடை பில்லை பாருங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அடுத்த செய்தி
விண்வெளிப் பயணம் சொல்லும் ‘தூக்கத்தின் ரகசியங்கள்’

தொடர்புடைய செய்திகள்